
BCCI president Sourav Ganguly hopeful of IPL 2022 taking place in India (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நேற்றுடன் நடைபெற்று முடிந்தது. இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த இத்தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றியமைக்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வேளைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளது. ஏனெனில் அடுத்த சீசனில் மேலும் இரு புது அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.