
BCCI set for windfall at IPL media rights auction (Image Source: Google)
கிரிக்கெட் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று தருவது ஐபிஎல் தொடராகும். இதனால் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதில் எப்போதுமே கடும் போட்டி இருக்கும். தற்போது ஐபிஎல் தொடரை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. அந்த நிறுவனம் 2018 முதல் 2022 வரை ரூ.16 ஆயிரத்து 347.5 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை பெற்று இருந்தது.
அதற்கு முன்பு 2008 முதல் 2017 வரை சோனி நெட்வொர்க் ரூ.8 ஆயிரத்து 200 கோடிக்கு பெற்று ஒளிபரப்பு இருந்தது. ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமம் வழங்கும் நடைமுறையை கிரிக்கெட் வாரியம் தொடங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
ஆன்லைன் மூலம் ஒளிபரப்பு உரிமையை வழங்கும் ஏலம் நடை முறையை இந்த வாரத்தில் தொடங்கும். ஏப்ரல் முதல் மே மாதத்தில் ஏல பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.