BCCI To Stage IPL 2022 Across Six Venues In Maharashtra And Gujarat – Reports (Image Source: Google)
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஐபிஎல் சீசனில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன.
10 அணிகள் பங்கேற்பதால், ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் 74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபிஎல் லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மும்பை, புனேயில் உள்ள 5 மைதானங்களில் போட்டி நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானம், டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம், பிரபோர்ன் மைதானம், நவி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டேடியம், புனேயில் உள்ள மைதானம் உள்ளிட்ட 5 இடங்களில் போட்டி நடக்கிறது.