
Ben Stokes has announced he will retire from ODIs after Tuesday's game against South Africa (Image Source: Twitter)
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும், டெஸ்ட் அணியின் கேப்டனுமானவர் பென் ஸ்டோக்ஸ். இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதுடன், இந்தியாவுடனான் டெஸ்டை சமன் செய்திருந்தது.
ஆனால் சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் அவரால் சிறப்பாக செயல்படமுடியாமல் உள்ளார். அதிலும் இந்திய அணிக்கெதிரான தொடரின் ஒரு போட்டியில் கூட அவரால் அரைசதத்தை கடக்க முடியவில்லை.
இதனால் அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதன்படி நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.