
இதற்கு காரணம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும் தொடர்ந்து டி 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று அவர் அறிவித்தார். தமது ஓய்வுக்கு காரணம் தொடர்ந்து நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் தான் என்று பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள அட்டவணையில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது சாத்தியம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். பென் ஸ்டோக்ஸின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும், அவரின் இந்த முடிவுக்கு காரணம் ஐசிசி யின் இந்த அட்டவணை தான் என்று குற்றம் சாட்டி வருகின்றன.
இது குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், “பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய செய்தி. தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால்தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தொடர்ந்து விளையாடினால் வீரர்களுக்கு பைத்தியம் தான் பிடிக்கும். ஐசிசி உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என தொடர்ந்து போட்டிகளை நடத்தி வருகிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் அவர்களின் லாபத்திற்காக கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றன.