Advertisement

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவுக்கு வந்த பென் ஸ்டோக்ஸ் - ரசிகர்கள் அதிர்ச்சி!

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுப்பதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 30, 2021 • 22:28 PM
Ben Stokes withdraws from England Men's Test Squad
Ben Stokes withdraws from England Men's Test Squad (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இளம் இங்கிலாந்து அணியை வழிநடத்தி, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றினார். 

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வெல்ல மிக முக்கிய காரணமாகவும், ஆஷஸ் தொடர் வெற்றி நாயகனாகவும் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார். 

Trending


 

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கலவரையின்றி ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இத்தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் உறுதிசெய்துள்ளது. 

இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்தும் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement