
Bhanuka Rajapaksa Announces Retirement From Sri Lanka Cricket (Image Source: Google)
இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் இளம் அதிரடி வீரராக பார்க்கப்பட்டவர் பானுகா ராஜபக்ஷ. மேலும் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவர் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
இந்நிலையில் பானுகா ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருப்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனது ஓய்வு கடிதத்தை கிரிக்கெட் நிர்வாகத்திடம் அளித்ததாக இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சமீபத்தில் அறிமுகப்படுத்திய உடற்தகுதி தரத்துடன் கிரிக்கெட் விளையாட முடியாது என்று பானுகா குறிப்பிட்டுள்ளாராம்.