Advertisement
Advertisement
Advertisement

208 கி.மீ வேகத்தில் பந்துவீசிய புவனேஷ்வர் குமார்; இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் புவனேஸ்வர் குமார் 208 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசியதாக ஸ்பீடு கன் காட்டியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 27, 2022 • 13:09 PM
 Bhuvneshwar Kumar 208 Kmph Speed Gun Error Ind Vs Ire 1st T20
Bhuvneshwar Kumar 208 Kmph Speed Gun Error Ind Vs Ire 1st T20 (Image Source: Google)
Advertisement

ஒரு காலத்தில் இந்திய அணியில் கை விரல் விட்டு எண்ணும் அளவு தான் 140 கிலோ மீட்டர் என்ற வேகத்தையே சிலர் வீரர்கள் வீசுவார்கள். ஆனால் ஐபிஎல் மற்றும் விராட் கோலி காலத்துக்கு கிறகு, அது மெல்ல மெல்ல மாறி வந்தது.

இப்போது இந்திய அணியில் அண்டர் 19 கிரிக்கெட் விளையாடும் வீரர்களே சர்வ சாதாரணமாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசுகிறார்கள். இந்த நிலையில் காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்துவீசி, புதிய சாதனைகள் எல்லாம் படைத்தார். ஏதோ, டீ காபி குடிப்பது போல் எப்போதும் 150 கிமீ வேகத்தில் பந்துவீசுவதை உம்ரான் மாலிக் பழக்கமாக வைத்திருந்தார்.

Trending


ஐபிஎல் போட்டியில் கூட தொடர்ந்து 14 போட்டிகளில் அதிவேகமாக பந்துவீசி, அதற்காக விருதுகளை வாங்கினார் மேலும் பயிற்சியில் கூட 163 கிமீ வேகத்தில் வீசி உம்ரான் மாலிக் அசத்தினார். நேற்று ஒரு உலக சாதனை நிகழ்ந்துள்ளது. ஆனால், அது உம்ரான் மாலிக் படைத்தது அல்ல, புவனேஸ்வர் குமார் செய்தது

என்னது புவனேஸ்வர் குமாரா என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடையலாம். எப்போதும் ஸ்விங்கை மட்டுமே நம்பி பந்துவீசும் புவனேஸ்வர் குமார், அதிகபட்சம் 135 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசுவதே ஆச்சரியம் தான். ஆனால், அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் புவனேஸ்வர் குமார் மணிக்கு 208 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசினார் என்று ஸ்பீட் கன் காட்டியது.

 

சரி, எதாவது தவறுதலாக காட்டி இருக்கலாம் என்று நினைத்தால் மீண்டும் 208 கிமீ வேகத்தில் புவனேஸ்வர் குமார் பந்துவீசியதாக தெரியவந்தது. இதனையடுத்து, புவனேஸ்வர் குமார் புதிய உலக சாதனை படைத்ததாக ரசிகர்கள் ட்வீட் போட்டு கொண்டாடினர். கடைசியில் பந்துவீச்சு வேகத்தை கணக்கீடும் ஸ்பிட்  கோளாறு இருப்பதால் தவறுதலாக காட்டியதாக தெரிவிக்கப்பட்டது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement