
இந்தியாவில் கரோனா 2வது அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் துவண்டு போய் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் தான் உள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் ஆக., 4ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ஆம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள். அதேசமயம், இதில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ் குமார் ஆகிய மூன்று சீனியர் வீரர்கள் பெயர் இடம்பெறவில்லை.