
பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறவில்லை. இதனால் பொருளாதார சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருந்து வருகிறது. வெளிநாட்டு அணிகளை பாகிஸ்தான் வந்து விளையாட வைக்க பல கட்ட முயற்சிகளை எடுத்தது.
இதனால் நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்தன. ஆனால் நியூசிலாந்து தொடர் நடைபெறுவதற்கு சற்றுமுன் பாதுகாப்பு காரணங்களால் கிரிக்கெட் விளையாட முடியாது என தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியும் தொடரை ரத்து செய்தது.
இது பாகிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் அளவிலும், பொருளாதார அளவிலும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா கூறுகையில் ‘‘ஐசிசியின் 50 சதவீத நிதியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்பட்டு வருகிறது. ஐசிசிக்கு 90 சதவீத நிதி பிசிசிஐ-யிடம் இருந்து வருகிறது.