Advertisement
Advertisement
Advertisement

ஆஷஸ் தொடர்: ட்ராவிஸ் ஹெட்டிற்கு கரோனா உறுதி!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ட்ராவிஸ் ஹெட்டிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement
Blow For Australia As Travis Head Tests Positive Ahead Of Sydney Test
Blow For Australia As Travis Head Tests Positive Ahead Of Sydney Test (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 31, 2021 • 11:57 AM

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. அடுத்து நடக்கும் 2 ஆட்டங்களும் முறைக்காகவே நடத்தப்பாட்டாலும், இங்கிலாந்து அணியை க்ளீன் ஸ்வீப் செய்ய ஆஸி. அணிகடுமையாக முயற்சிக்கும்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 31, 2021 • 11:57 AM

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான டிராவிஸ் ஹெட் பிரிஸ்பேனில் 152 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்தது. அறிகுறியில்லாத கரோனா தொற்று என்பதால், 7 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

Trending

டிராவிஸ் ஹெட்டுடன் ஆஸ்திரேலிய அணியில் மற்ற வீரர்கள் நெருக்கமாக இருந்தார்களா அவர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

மிட்செல் மார்ஷ், நிக் மேடிஸன், ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் அணியில் இடம் பெற தயாராக இருந்தாலும், ஹெட்டுக்குப் பதிலாக கவாஜா இடம் பெறவே அதிக வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே இங்கிலாந்து அணியில் பந்துவீச்சுப்ப யிற்சியாளர் ஜான் லீவிஸ், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஜீத்தன் படேல், பயிற்சியாளர் டேரன் வென்னஸ் ஆகியோர் கரோனாஅறிகுறி காரணாக தனிமைப்படுத்திக்கொண்டனர்.

இதுதவிர ஐசிசி போட்டி நடுவர் டேவிட் பூன் கரோனா தொற்றால் பாதி்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement