டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நியூ., வேகப்புயல்!
காயம் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லோக்கி ஃபர்குசன் விலகினார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் லோக்கி ஃபர்குசன் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் காயம் தீவிரமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக லோக்கி ஃபர்குசன் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது.
தற்போது லோக்கி ஃபர்குசன் தொடரிலிருந்து விலகியுள்ளதால், அவருக்கு மாற்று வீரராக ஆடம் மில்னேவை அணியில் சேர்க்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் அனுமதி கோரியுள்ளது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
முன்னதாக சமீபத்தில் நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக லோக்கி ஃபர்குசன் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now