Advertisement
Advertisement
Advertisement

பார்படாஸ் ராயல்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

சிபிஎல் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
பார்படாஸ் ராயல்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பார்படாஸ் ராயல்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 16, 2024 • 09:59 PM

BR vs SKN, Match 18 Caribbean Premier League, Dream11 Prediction:  வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு சிபிஎல் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றி ஒரு தோல்வியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் பேட்ரியாட்ஸ் அணி விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் 6 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 16, 2024 • 09:59 PM

BR vs SKN : போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - பார்படாஸ் ராயல்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ்
  • இடம் - கென்ஸிங்டன் ஓவல், பார்படாஸ்.
  • நேரம் - செப்டம்பர் 18, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

BR vs SKN : Pitch Report

பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 51 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 32 போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 16 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோரானது 139 ரன்களாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம். 

BR vs SKN : Where to Watch?

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

BR vs SKN : Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 18
  • பார்படாஸ் ராயல்ஸ்- 08
  • நேவிஸ் பேட்ரியாட்ஸ் - 10
  • முடிவில்லை - 00

Barbados Royals vs St Kitts and Nevis Patriots Predicted XIs

பார்படாஸ் ராயல்ஸ்: அலிக் அதானாஸ், குயின்டன் டி காக், டேவிட் மில்லர், கதீம் அலீன், ரோவ்மன் பவல் (கே), ரிவால்டோ கிளார்க், ஜேசன் ஹோல்டர், ஓபேத் மெக்காய், நவீன்-உல்-ஹக், கேசவ் மஹாராஜ், மஹீஷ் தீக்ஷனா

செயின்ட் லூயிஸ் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ்: ஆண்ட்ரே பிளெட்சர் (கே), எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், மைக்கைல் லூயிஸ், ரைலீ ரூஸோவ், வனிந்து ஹசரங்க, ஜோஷ் கிளார்க்சன், அன்ரிச் நோர்ட்ஜே, ஜோஹன் லெய்ன், வீராசாமி பெர்மால், தப்ரைஸ் ஷம்சி

BR vs SKN Match 18 Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: ஆண்ட்ரே பிளெட்சர், குயின்டன் டி காக் (துணை கேப்டன்)
  • பேட்டர்ஸ்: டேவிட் மில்லர், எவின் லூயிஸ், மைக்கைல் லூயிஸ்
  • ஆல்ரவுண்டர்கள்: ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ் (கேப்டன்), வனிந்து ஹசரங்க
  • பந்துவீச்சாளர்கள்: கேசவ் மகராஜ், அன்ரிச் நோர்ட்ஜே, மகேஷ் தீக்ஷனா

BR vs SKN Match 18 Dream11 Prediction, Today Match BR vs SKN, BR vs SKN Dream11 Team, Fantasy Cricket Tips, BR vs SKN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024 

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement