
Brad Hogg Feels There Are Shades Of MS Dhoni And Rohit Sharma In Hardik Pandya’s Leadership (Image Source: Google)
15ஆவது ஐபிஎல் சீசன் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அறிமுக அணியாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த நிலையில் தோனியின் தலைமை பண்புகளை ஹர்திக் பாண்டியா பிரதிபலிப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பேசியுள்ளார்.
பாண்டியா குறித்து அவர் கூறுகையில்," எம்.எஸ். தோனியின் விளையாட்டுப் பாணியின் பண்புகளை பாண்டியா-விடம் பார்க்க முடிகிறது. அணி மிகவும் அழுத்தத்தின் கீழ் இருக்கும் எந்தச் சூழ்நிலையிலும் அவர் அமைதியாக செயல்படுகிறார்.