Advertisement

SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் ரோஹித் சர்மா!    

காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணி துணைக்கேப்டன் ரோஹித் சர்மா விளகியுள்ளார்.

Advertisement
BREAKING: Rohit Sharma Ruled Out Of India's Tour Of South Africa
BREAKING: Rohit Sharma Ruled Out Of India's Tour Of South Africa (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 13, 2021 • 06:55 PM

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 13, 2021 • 06:55 PM

இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய சோதனை மற்றும் லேசான பேட்டிங் பந்துவீச்சு பயிற்சி மட்டும் நடைபெற்றது.

Trending

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங் செய்யும் போது அவருக்கு பந்து பட்டு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து வலியால் துடித்த அவர் பயிற்சியை பாதியில் விட்டதாக தெரிகிறது. 
இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை என்றும் வேண்டுமானால் ஒரு வாரம் ஓய்வில் இருக்கலாம் என்று கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளார். மேலும் அவரால் ஒருநாள் தொடரிலும் விளையாட முடியுமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இந்திய ஏ அணியின் கேப்டனாக செயல்பட்ட பிரியங்க் பாஞ்சல் இந்திய அணியில் சேர்க்கப்படவுள்ளார். மேலும் டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக மீண்டும் அஜிங்கியா ரஹானே பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட 4 நாள் டெஸ்ட் போட்டியில் பிரியங்க் பாஞ்சல் 120 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 7 ஆயிரத்திற்கு அதிகமான ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement