
கரோனா பரவலால் நிறுத்தப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பா் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி பற்றியும் தனது அணியின் நிலைமை பற்றியும் கேகேஆர் அணிக்கு அளித்த பேட்டியில் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய மெக்கல்லம், “ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். இனி வரும் ஆட்டங்கள் எங்களுக்கானதாக இருக்க வேண்டும். அந்த நிலைமையில்தான் உள்ளோம். அடுத்த நான்கைந்து வாரங்களில் வீரர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். நாங்கள் இனி எப்படி விளையாடி, எந்த இடத்தை அடைவோம் என்பது யாருக்குத் தெரியும்?