
இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த ஐசிசி முடிவு செய்தது. ஏற்கனவே பிசிசிஐ இந்த நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடித்த வேளையில் ஐசிசியும் கடந்த 17ஆம் தேதி இந்த உலக கோப்பை தொடரை வெற்றிகரமாக தொடங்கியது. தற்போது தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்து நாளை சூப்பர்-12 போட்டிகள் துவங்க உள்ளன.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது ? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ இந்த டி20 தொடரை கைப்பற்ற போகும் அணி குறித்து ஐசிசி இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த கட்டுரையில் அவர், “டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அதிகமாக சாதித்தது இல்லை. அதனை மாற்றுவதற்கு இதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலிய அணி இந்த முறை தங்களது ஆதிக்கத்தை ஆரம்பிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வது எளிதான கிடையாது.