ஐபிஎல் 2021: சிஎஸ்கேவிடம் இந்த குறைபாடுகள் உள்ளன - பிரையன் லாரா!
சென்னை அணிக்கு சில குறைபாடுகள் இருப்பதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா பட்டியலிட்டு உள்ளார்.

ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு அணிகள் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.மேலும் தொடர் வெற்றிகளைக் குவித்த காரணத்தினால் பிளே ஆஃப் தகுதிச் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.
இப்படி தொடர்ந்து கெத்து காட்டி வரும் சென்னை அணிக்கு சில குறைபாடுகள் இருப்பதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா பட்டியலிட்டு உள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், 'சென்னை அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் நன்றாக விளையாடி வந்தாலும் அவர்களுக்கென்று சில குறைபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதை மற்ற அணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான், அவர்களுக்கு உள்ள குறைபாடுகள் என்ன, யாரெல்லாம் சரியாக திறனை வெளிப்படுத்துவதில்லை என்றெல்லாம் பட்டியலிடப் போவதில்லை.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஐபிஎல்-ன் இரண்டாவது பாதி தொடங்கியதை அடுத்து சென்னை, மும்பைக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடியது. அந்தப் போட்டியில் சென்னை அணி, அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மும்பை தவறவிட்டது' என்று சூசகமாக சென்னை அணியின் பேட்டிங் குறித்து சுட்டிக்காட்டி உள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now