
Brian Lara Disagrees With Ravichandran Ashwin Over MCC's Mankad Move (Image Source: Google)
பந்துவீச்சாளர் முனையில் நிற்கும் வீரர், பந்துவீச்சாளர் பந்துவீசும் முன் க்ரீஸை விட்டு நகர்ந்தால் அவர் ஸ்டம்ப்பில் அடித்து ரன் அவுட் செய்வதே மன்கட் ரன் அவுட்.
மன்கட் ரன் அவுட் செய்யலாம் என்றாலும், அது ஆட்டத்தின் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்பதால், வீரர்கள் யாரும் அதை செய்ய தயங்குவார்கள். பந்துவீசும் முன் க்ரீஸை விட்டு நகரும் பேட்ஸ்மேனை எச்சரித்து மட்டுமே செல்வார்கள்.
ஆனால் 2019 ஐபிஎல்லில், அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் ரன் அவுட் செய்தார். அது விதிகளுக்குட்பட்டதுதான் என்று அஸ்வினுக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்தாலும், பல முன்னாள் வீரர்கள் அஸ்வின் செயலை ஆட்டத்தின் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என விமர்சித்தனர்.