Advertisement

அசத்தலான த்ரோ மூலம் ரன் அவுட் செய்து அசத்திய சாம் கரண்; வைரலாகும் காணொளி!

டர்ஹாம் அணிக்கு எதிரான டி20 பிளாஸ்ட் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே அணி வீரர் சாம் கரண் அடித்த அபாரமான த்ரோ குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
அசத்தலான த்ரோ மூலம் ரன் அவுட் செய்து அசத்திய சாம் கரண்; வைரலாகும் காணொளி!
அசத்தலான த்ரோ மூலம் ரன் அவுட் செய்து அசத்திய சாம் கரண்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 04, 2024 • 10:17 AM

இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, அதன்படி களமிறங்கிட டர்ஹாம் அணியில் மைக்கேல் ஜோன்ஸ், ஆஷ்டன் டர்னர், பாஸ் டி லீட் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 04, 2024 • 10:17 AM

இதனால் டர்ஹாம் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மைக்கேல் ஜோன்ஸ் 37 ரன்களையும், ஆஷ்டன் டர்னர் 26 ரன்களையும், பாஸ் டி லீட் 24 ரன்களையும் சேர்த்தனர். சர்ரே அணி தரப்பில் டேனியல் வோரல், ரீஸ் டாப்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சாம் கரண், டாம் கரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

Trending

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சர்ரே அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் வில் ஜேக்ஸ், லௌரி எவான்ஸ், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த டோமினிக் சிப்லி மற்றும் சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

பின்னர் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோமினிக் சிப்லியும், 52 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் சாம் கரணும் ஆட்டமிழந்தாலும், சர்ரே அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டர்ஹாம் அணியை வீத்தி அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டோமினிக் சிப்லி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

 

இந்நிலையில் இப்போட்டியில் சாம் கரண் அடித்த புல்லட் வேக த்ரோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, இன்னிங்ஸின் 11ஆவது ஓவரில் டர்ஹாம் அணி வீரர் ஆஷ்டன் டர்னர் பந்தை மிட் ஆஃப் திசையில் அடித்துவிட்டு சிங்கிள் எடுக்க முயற்சித்தார். இதன் காரணமாக நான் ஸ்டிரைக்கரில் இருந்த காலின் அக்கர்மேனும் சிங்கிள் எடுக்கும் முயற்சியில் கிரீஸை விட்டு வெளியேறினார். 

Also Read: Funding To Save Test Cricket

அப்போது மிட் ஆஃப் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த சாம் கரண், பந்தை நேரடியாக புல்லட் வேகத்தில் நன் ஸ்டிரைக்கர் எண்டை நோக்கி அடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத காலின் அக்கர்மேன் 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் சாம் கரண் அடித்த இந்த அபாரமான த்ரோ குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement