Advertisement

ஒருநாள் தொடருக்கான தோல்வி குறித்து பேசிய ஜோஸ் பட்லர்!

பந்துவீச்சின் போது சிறப்பான துவக்கம் கிடைத்தும் அதனை அப்படியே கொண்டு செல்ல தவறி விட்டோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 18, 2022 • 12:35 PM
Buttler rues the one that got away as England slump to rare home-series loss
Buttler rues the one that got away as England slump to rare home-series loss (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்ததால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த மூன்றாவது போட்டியின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதல் விளையாடிய இங்கிலாந்து அணியானது 259 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதனைத்தொடர்ந்து 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ரிஷப் பந்த் 125 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Trending


அதேபோன்று மற்றொரு அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் குறித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணியானது டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணியிடம் பறிகொடுத்தது. 

இந்நிலையில் போட்டி முடிந்து இந்த தொடரில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், “நாங்கள் இந்த இறுதி போட்டியில் எதிர்பார்த்த ரன்களை விட சற்று குறைவாகவே ஸ்கோர் செய்தோம். பந்துவீச்சின் போது சிறப்பான துவக்கம் கிடைத்தும் அதனை அப்படியே கொண்டு செல்ல தவறி விட்டோம். கடந்த சில மாதங்களாகவே இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தங்களது பெஸ்ட்டை வழங்கவில்லை அந்த தவறை ஒப்புக் கொள்கிறோம். ஆனாலும் பந்து வீச்சில் எங்களது அணியின் வீரரான ரீஸ் டாப்லி அருமையாக பந்து வீசினார். இந்த தொடரில் அவரது செயல்பாடு மிகவும் திருப்தியாக இருந்தது.

டி20 தொடரினை தொடர்ந்து அவர் இந்த ஒருநாள் தொடரிலும் எங்கள் அணியின் முக்கிய பவுலராக சிறப்பாக பந்து வீசியதில் மகிழ்ச்சி. இந்திய அணியின் வீரர்களான ரிஷப் பந்த் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோரது ஆட்டம் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து சென்றது. அடுத்தடுத்து இந்திய அணியின் துவக்க விக்கெட்டுகளை நாங்கள் கைப்பற்றி இருந்தாலும் மிடில் ஆர்டரில் அவர்கள் இருவரின் விக்கெட்டை வீழ்த்த தவறிவிட்டோம்.

ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் நாங்கள் செய்த சில தவறுகள் இந்த தொடரை இழக்க காரணமாக அமைந்துவிட்டது. இந்த கேப்டன்சி பதவி எனக்கு முற்றிலும் திருப்தி அளிக்கிறது. ஒரு வீரராக நான் அனுபவம் வாய்ந்த ஒருவராக இருந்தாலும், கேப்டனாக தற்போது தான் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறேன். எனவே இனிவரும் தொடர்களில் எனது சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement