
CA Announces Australia's Test Squad For Pakistan Tour (Image Source: Google)
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் மறுத்ததால் ஆஸ்திரேலிய அணியும் தொடரை ரத்து செய்யுமா என பாகிஸ்தான் ரசிகர்கள் பயந்திருந்தார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் அறிவித்துள்ளது.
கடந்த 1998-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்குச் செல்வதால் இத்தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி.