Advertisement

உலகக்கோப்பை தகுதிச்சுற்று: மெக்லீட் அதிரடியில் ஸ்காட்லாந்து அசத்தல் வெற்றி!

அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
Calum MacLeod's century guides Scotland to a comfortable win over USA
Calum MacLeod's century guides Scotland to a comfortable win over USA (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 14, 2022 • 01:26 PM

ஸ்காட்லாந்தில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 14, 2022 • 01:26 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர் - சுஷாந்த் மொதானி இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர் 

Trending

இதில் ஸ்டீவன் டெய்லர் 37 ரன்காளில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சுஷாந்த் அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். 

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஆரோன் ஜோன்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 123 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணியில் கைல் கோட்ஸர் 28 ரன்களிலும், கிரேக் வெல்லஸ் 45 ரன்களிலும், மைக்கேல் ஜோன்ஸ் 18 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கலம் மெக்லீட் - மேத்யூ கிராஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கலம் மெக்லீட் சதமடித்து அசத்தினார். அதன்பின் 117 ரன்களில் மெக்லீட் ஆட்டமிழக்க, இறுதியில் 47.4 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி இலக்கை எட்டியது.

இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கலம் மெக்லீட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement