Chahal: Very Difficult To Adapt Cold Condition As A Finger Spinner (Image Source: Google)
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியே வெற்றிகரமாக அமைந்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவேந்திர சாஹல் தான். சிறப்பாக பந்துவீசிய சாஹல் 3 ஓவர்களை வீசி 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மேலும் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனையடுத்து அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடியது குறித்து சாஹல் பேசியுள்ளார். அதில், “பவுலர்களுக்கு எந்தளவிற்கு சுதந்திரம் வேண்டுமோ அதனை கொடுக்கிறார். இதனை விட முக்கியமான ஒன்று ஹர்திக் மிகவும் பொருமையாக இருந்தது தான். எனது திட்டத்தை செயல்படுத்த முழு வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.