
Chennai Likely To Host IPL 2022 Opener On April 2: Report (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று, நான்காவது முறையாக வெற்றி மகுடம் சூடியது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் 15ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய இரு புதிய அணிகளுடன் சேர்த்து 10 அணிகளுடன் தொடர் நடைபெறவுள்ளது.
இதனால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு, மெகா ஏலம் மூலம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதிலிருந்தே அதிகரித்து வருகிறது.