தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் களமிறங்கும் சிஎஸ்கே!
தென் ஆப்பிரிக்காவில் அடுத்த வருடம் தொடங்கவுள்ள டி20 போட்டியில் ஓர் அணியை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட நான்கு ஐபிஎல் அணிகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.
2023 ஜனவரியில் புதிய டி20 லீக் போட்டியைத் தொடங்கவுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். சூப்பர் ஸ்போர்ட் ஊடகத்துடன் இணைந்து இப்போட்டியை நடத்தவுள்ளது. தனியார் நிறுவனங்களின் சார்பில் ஆறு அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.
மொத்தம் 33 ஆட்டங்கள். இதற்கு முன்பு 2017 முதல் 2019 வரை இரு டி20 போட்டிகளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு அடுத்ததாக உலகின் 2ஆவது சிறந்த டி20 போட்டியாக இது உருவாக வேண்டும் என்கிற லட்சியத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.
Trending
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தலைமையில் இயங்கும் ஒரு கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் தென் ஆப்பிரிக்கா டி20 போட்டியில் ஓர் அணியை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன.
ஐபிஎல் போட்டியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய சுந்தர் ராமன், இப்போட்டியில் 12.5% பங்குகளை வாங்கியுள்ளார். ஐபிஎல் அணிகளின் பங்களிப்பில் தென் ஆப்பிரிக்க டி20 போட்டி நடைபெறும் சூழல் உருவாகியுள்ளதால் இப்போட்டி நிச்சயம் ரசிகர்களைக் கவரும் விதத்தில் இருக்கும் என நம்பலாம்.
Win Big, Make Your Cricket Tales Now