Advertisement

ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

அடுத்த ஐபிஎல் சீசனுக்கு அணியை பலப்படுத்தும் வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இழந்த ஃபார்மை மீட்டெடுக்க சிஎஸ்கே வீரர்கள் முயல்வார்கள்.

Advertisement
Chennai Super Kings vs Gujarat Titans, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probab
Chennai Super Kings vs Gujarat Titans, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probab (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 15, 2022 • 11:57 AM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 3:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 62-வது லீக் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 15, 2022 • 11:57 AM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

சென்னை அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 9ஆம் இடத்தில் உள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வியை தழுவியது. அதோடு சென்னையின் பிளே-ஆஃப் கனவும் முற்றிலும் தகர்ந்துபோனது.

எனவே சென்னை அணிக்கு இனிமேல் இழக்க எதுவுமில்லை என்பதால் எஞ்சிய இரு லீக் ஆட்டங்களிலும் நெருக்கடியின்றி விளையாட முயற்சிக்கும்.  மேலும், அடுத்த ஐபிஎல் சீசனுக்கு அணியை பலப்படுத்தும் வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இழந்த ஃபார்மை மீட்டெடுக்க சிஎஸ்கே வீரர்கள் முயல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

மறுபுறம் அறிமுக அணியான குஜராத், நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தியிருக்கிறது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இன்றைய ஆட்டத்தில் நெருக்கடியின்றி அதிரடியை தொடர முனைப்பு காட்டும் எனத் தெரிகிறது.

குஜராத் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக இருக்கிறது. ஷுப்மான் கில் (384 ரன்கள்), ஹர்திக் பாண்டியா (344 ரன்கள்), டேவிட் மில்லர் (332 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் அமர்க்களப்படுத்துகின்றனர்.  முகம்மது ஷமி (16 விக்கெட்டுகள்), ரஷித் கான் (15 விக்கெட்டுகள்) பந்துவீச்சில் மிரட்டுகின்றனர்.

இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதிய  ஆட்டத்தில் குஜராத்  3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க சிஎஸ்கே வரிந்து கட்டும் என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச அணி 

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, மொயீன் அலி, சிவம் துபே, எம்எஸ் தோனி (கே), டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி

குஜராத் டைட்டன்ஸ் - விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், முகமது ஷமி

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர்கள் - விருத்திமான் சாஹா
  •      பேட்டர்ஸ் - ஷுப்மன் கில் (விசி), ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே (சி), டேவிட் மில்லர்
  •      ஆல்-ரவுண்டர்கள் - மொயீன் அலி
  •      பந்துவீச்சாளர்கள் - யாஷ் தயாள், ரஷித் கான், முகேஷ் சவுத்ரி, யாஷ் தயாள்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement