ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தொடர்ந்து 4 தோல்விகளால் துவண்டு போயுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றியை தொடரும் முனைப்பில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியுடன் மோதவுள்ளது.
இன்று நடைபெறும் ஐபிஎல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இடம்- டிஒய் பாட்டில் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலும் படுதோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளாடி வருகிறது. புதிதாக கேப்டனாக பதவியேற்ற ஜடேஜா மீது கடும் விமர்சனங்கள் எழ இந்த தொடர் தோல்விகள் வழிவகுத்துவிட்டன. சென்னைக்கு ஓப்பனிங்கே சரியில்லை. ஆம்! துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.
இந்த சீசனில் ருதுராஜ் எடுத்த ரன்கள் 0,1,1,16. மொத்தமாக அவரது இந்த சீசன் சராசரி வெறும் 4.5 மட்டுமே. ஓப்பனர்கள் சொதப்பலை துவக்கி வைக்க, அதை அப்படியே மற்றவர்களும் பின்பற்றி விடுவதால் சென்னை அணி தொடர்ந்து மண்ணைக் கவ்வுகிறது. இந்த ஆட்டத்தில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஏகப்பட்ட குறைகளை வைத்துள்ள சென்னை, தனது அணியின் முன்னாள் வீரர் டூ பிளசிஸ் தலைமையில் வரும் ஆர்சிபி அணியை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே பலரது கேள்வியாக உள்ளது. ஒருவேளை இந்த ஆட்டத்தில் சென்னை தோல்வியுற்றால் அது அந்த அணிக்கு ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக 5வது தொடர் தோல்வியாக அமைந்துவிடும்.
ஆர்சிபி அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியுற்ற போதிலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் இந்த சீசனின் பலமான அணிகளாக கருதப்படும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளையும் மும்பை அணியையும் வீழ்த்தி அசத்தியது. தற்போது ஹாட்ரிக் வெற்றியை தக்கவைத்து தொடரும் முனைப்பில் சென்னை அணியை எதிர்கொள்ள போகிறது. தனது முன்னாள் அணியை டூ பிளசிஸ் எவ்வாறு வியூகம் வகுத்து வீழ்த்தப் போகிறார் என்பதே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அந்த அணியில் டூ பிளசிஸ், விராட் கோலி, அனுஜ் ராவத் என துவக்க பேட்டிங் மிகப் பலமாக உள்ளது.
மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங்கிற்கு தினேஷ் கார்த்திக், க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அசுர பலத்துடன் உள்ளனர். பந்துவீச்சில் சிராஜ், ஹசரங்கா, ஆகாஷ் தீப் ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள். சிறப்பாக பந்துவீசும் ஹர்ஷல் படேல் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார் என கூறப்படுவதால், அது ஆர்சிபிக்கு பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது. தனது உத்வேகமான ஆட்டத்தை ஆர்சிபி வெளிப்படுத்தும் பட்சத்தில், தடுமாறும் சென்னை அணியை எளிதாக வீழ்த்த முடியும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 27
- சிஎஸ்கே வெற்றி - 18
- ஆர்சிபி வெற்றி - 9
உத்தேச அணி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கே), ஷிவம் துபே, எம்எஸ் தோனி, டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா, கிறிஸ் ஜோர்டான், முகேஷ் சவுத்ரி/ ராஜ்வர்தன் ஹங்ரேக்கர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, தினேஷ் கார்த்திக, ஜோஸ் ஹசில்வுட், வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக்
- பேட்டர்ஸ் - ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷிவம் துபே
- ஆல்-ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்க, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா
- பந்துவீச்சாளர்கள் - ஆகாஷ் தீப், கிறிஸ் ஜோர்டான், டுவைன் பிராவோ
Win Big, Make Your Cricket Tales Now