
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இதனால் கேப்டவுனில் நடைபெறவுள்ள 3ஆவது டெஸ்ட் போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்போட்டியில் வெற்றி பெறும் அணி தான் தொடரை கைப்பற்றும். முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்தியாவும், தங்களது பெருமைகளை காப்பாற்றி கொள்ள தென் ஆப்பிரிக்காவும் முணைப்பு காட்டி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, அடுத்த போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விமர்சனங்களில் சிக்கியிருந்த புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டனர். கடந்த டெஸ்டில் இருவரும் அரைசதம் அடித்ததால், அவர் விஷயத்தில் கோலி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.