Advertisement

அதிரடியில் மிரட்டிய புஜாரா; பிரம்மிப்பில் ரசிகர்கள்!

சசெக்ஸ் அணிக்காக விளையாடிவரும் இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜ்ரா அதிரடியாக விளையாடி சதமடித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
 Cheteshwar Pujara hammers 107 off 79 balls in 50-over game for Sussex
Cheteshwar Pujara hammers 107 off 79 balls in 50-over game for Sussex (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 13, 2022 • 12:44 PM

இந்திய அணியின் ‘தடுப்புச்சுவர்’ என்று அழைக்கப்படும் சட்டேஷ்வர் புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து பந்துகளை தடுத்து தடுப்பாட்டத்தில் மட்டுமே விளையாடும் ஆற்றல் பெற்றவர். டெஸ்டில் மிகமிக அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைவான ரன்களை அடிக்கிறார் என்ற விமர்சனம் இவர் மீது இருக்கிறது. இதனால்தான், இந்திய ஒருநாள், டி20 அணிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 13, 2022 • 12:44 PM

இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் லண்டன் ஒருநாள் 2022 தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பை புஜாரா பெற்றார். இந்த அணி நேற்று இரவு வார்விக்ஷிர் அணியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போது முதலில் களமிறங்கிய வார்விஷிர் அணி 310 ரன்களை குவித்த நிலையில், அடுத்துக் களமிறங்கிய சக்சஸ் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது.

Trending

இருப்பினும், ஒருபக்கம் புஜாரா அபாரமாக விளையாடி ரன்களை குவித்து வந்தார். கடைசி கட்டத்தில், 45ஆவது ஓவருக்குப் பிறகு அதிக ரன்கள் தேவைப்பட்டதால் புஜாரா அதிரடி காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில் 47ஆவது ஓவரில் லியம் நார்வெல் வீசிய 6 பந்துகளில் புஜாரா 4,2,4,2,6,4 என மொத்தம் 22 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் 79 பந்துகளில் 107 ரன்களை அவரால் சேர்க்க முடிந்தது.

அதன்பின் 49ஆவது ஓவரின்போது அவர் ஆட்டமிழந்துவிட்டார். இறுதியில் சசெக்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. புஜாரா இந்திய அணிக்காக மொத்தம் 5 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 51 ரன்களை அடித்துள்ளார். 

மேலும் 30 ஐபிஎல் போட்டிகளில் 99.74 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 390 ரன்களை அடித்திருக்கிறார். கடைசியாக 2021ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புஜாராவை ஏலம் எடுத்திருந்தது. அடுத்து, எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement