Advertisement

பாகிஸ்தானுக்கு ஆதரவாக ட்வீட் செய்த கெயில்; அமீரின் அசத்தல் பதில்!

பாகிஸ்தானில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுப்பயணம் சென்றிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, கடைசி நிமிடத்தில் தொடரை ரத்து செய்தது.

Advertisement
Chris Gayle Jokes He's Going To Pakistan, Mohammad Amir Replies
Chris Gayle Jokes He's Going To Pakistan, Mohammad Amir Replies (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 19, 2021 • 07:23 PM

பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி வீரர்கள் சென்றிருந்தனர். பலத்த பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு நியூசிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 19, 2021 • 07:23 PM

ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் முதல் போட்டி பகல்-இரவு ஆட்டமாக தொடங்க இருந்தது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பாதுகாப்பு எச்சரிக்கை காரணத்தால், தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து அணி அறிவித்தது.

Trending

இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் வீரர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட்டை ரசிப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்து முடிவால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளது. முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக், ஐசிசி-யிடம் முறையிட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நாளை நான் பாகிஸ்தான் போகிறேன். என்னுடன் யார் வர்றீங்க’’ எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிறிஸ் கெய்ல் இந்த பதவியை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர், “உங்களை அங்கு சந்திக்கிறேன் லெஜண்ட்” என பதில் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement