Advertisement
Advertisement
Advertisement

அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் கிறிஸ் மோரிஸ் ஓய்வு!

பிரபல தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

Advertisement
Chris Morris Announces Retirement From All Forms Of Cricket
Chris Morris Announces Retirement From All Forms Of Cricket (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 11, 2022 • 02:18 PM

தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் கிறிஸ் மோரிஸ். இவர் கடந்த 2012 முதல் தென் ஆப்பிரிக்க அணிக்காக 4 டெஸ்டுகள், 42 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த 2017-க்குப் பிறகு டெஸ்டிலும் 2019-க்குப் பிறகு ஒருநாள், டி20யிலும் அவர் விளையாடவில்லை. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 11, 2022 • 02:18 PM

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். 81 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள கிறிஸ் மோரிஸை ஐபிஎல் 2021 ஏலத்தில் ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். (2020 ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி ரூ. 10 கோடிக்குத் தேர்வு செய்தது). 

Trending

அதற்கு முன்பு ரூ. 16 கோடிக்குத் தேர்வான யுவ்ராஜ் சிங்கின் சாதனையை மோரிஸ் தகர்த்தார். எனினும் ஐபிஎல் 2021 போட்டியில் 11 போட்டிகளில் விளையாடி 67 ரன்களும் 4 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்தார். 

இந்நிலையில்  அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார் கிறிஸ் மோரிஸ். அடுத்ததாக தென் ஆப்பிரிக்க உள்ளூர் அணியான டைட்டன்ஸுக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chris Morris (@tipo_morris)

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement