
Chris Woakes Returns To England T20 Squad For Sri Lanka Series (Image Source: Google)
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இத்தொடருக்கான குசால் பெரேரா தலைமையிலான 24 பேர் அடங்கிய இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈயன் மோர்கன் தலைமையிலான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இதில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் கடைசியாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரெலிய அணிக்கெதிரான போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.