
Colombo Set To Host All Matches During India's Tour Of Sri Lanka In July (Image Source: Google)
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜூலை மாதம் நடைபெறும் இத்தொடரின் அனைத்து போட்டிகளையும் கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடத்த உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அர்ஜுன் டி சில்வா கூறுகையில்,“இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முழுத் தொடரும் ஒரே இடத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி கொழும்புவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் போட்டிகள் அனைத்தையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.