
Conway Suffers Injury Due To Smashing His Bat, Ruled Out Of T20 WC Final & India Tour (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவை நெருங்கிவிட்டது. இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
அதன்படி நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதவுள்ளன. மேலும் இரு அணிகளும் இதுநாள் வரை டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற காரணமாக இருந்த டேவன் கான்வே, காயம் காரணமாக இறுதிப்போட்டி மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார்.