COVID-19: BCCI postpones Ranji Trophy, CK Nayudu Trophy, Women's T20 League (Image Source: Google)
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரதானமானது ரஞ்சி கோப்பை என்றழைக்கப்படும் முதல் தர கிரிக்கெட் தொடர் தான்.
கடந்தாண்டு கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட இத்தொடரின், இந்தாண்டுக்கான சீசன் இம்மாதம் தொடங்க இருந்தது. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.