
Covid-19 Outbreak In New Zealand's Camp As All-Rounder Michael Bracewell Tests Positive (Image Source: Google)
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியிலாவது நியூசிலாந்து அணி வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குள்ளாக இன்று நியூசிலாந்து வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், ஆல்ரவுண்டரி மிட்செல் பிரேசெல்லிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது.