
COVID-19: West Indies' leading women cricketers complete first phase of vaccinations (Image Source: Google)
உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி உலகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி வீராங்கனைகள், அணி ஊழியர்கள் என அனைவரும் தங்களது முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.
இதுகுறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் மருத்துவ குழு ஊழியர் இஸ்ரேல் தவ்லத் கூறுகையில், "கரோனா பரவுவதை தடுப்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி வீராங்கனைகள், அணி ஊழியர்கள் அனைவரும் தங்கள் முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.