Advertisement
Advertisement
Advertisement

கரோனா அச்சுறுத்தல்: அமெரிக்கா vs அயர்லாந்து ஒருநாள் போட்டி ரத்து!

அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

Advertisement
COVID: 1st ODI Between USA & Ireland Cancelled As Umpires Test Positive
COVID: 1st ODI Between USA & Ireland Cancelled As Umpires Test Positive (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 25, 2021 • 12:08 PM

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் அயர்லாந்து அணி 2 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 25, 2021 • 12:08 PM

இதில் முன்னதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்க இருந்தது. 

Trending

இந்நிலையில் இப்போட்டியின் நடுவருக்கு கரோனா தொற்று உறுதியானதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ரத்து செய்யப்படுவதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன. 

மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 28ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 30ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள், அடுத்த போட்டிக்கு அந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தலாம் என்றும், இல்லையெனில் தங்கள் மின்னஞ்சல் மூலம் டிக்கெட்டுகான ஆதரங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெறலாம் என்றும் அமெரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement