
Covid Watch: Vaccinated Fans Allowed For Remaining WI-PAK T20Is (Image Source: Google)
பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களின்றி நடைபெற்று வரும் இத்தொடரானது, தற்போது பார்வையாளர்களுடன் நடைபெறவுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி இத்தொடரின் எஞ்சியுள்ள 3 டி20 போட்டிகளுக்கும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.