
CPL 2021: Barbados Royals beat St Lucia kings by 8 wickets (Image Source: Google)
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 56 ரன்களைச் சேர்த்தார்.
பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பார்போடாஸ் ராயல்ஸ் அணியில் கைல் மேயர்ஸ் - கிளென் பிலீப்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.