
CPL 2021: Du Plessis on Fire; SLK set a Target on 176 (Image Source: Google)
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 25ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஆண்ட்ரே ஃபிளட்சர் ரன் ஏதுமின்றியும், மார்க் டியால் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் டூ பிளெசிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். பின் இப்போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டூ பிளெசிஸ் 84 ரன்களில் அட்டமிழந்தார்.