
CPL 2021: Du Plessis, Wiese boost St Lucia Kings' semifinal hopes (Image Source: Google)
சிபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. இதில் ஃபஃப் டூ பிளெசிஸ் 84 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பார்போடாஸ் ராயல்ஸ் அணியில் கைல் மேயர்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜான்சன் சார்லஸ் - ஷாய் ஹோப் இணை சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தில் ஸ்கோரை உயர்த்தியது.