
CPL 2021: St Kitts and Nevis Patriots are the CPL2021 Champions (Image Source: Google)
சிபிஎல் 2021 தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரகீம் கார்ன்வால், ரோஸ்டன் சேஸ் தலா 43 ரன்களைச் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கைத் துரத்திய பேட்ரியாட்ஸ் அணியில் கெயில், லூயிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த ஜோஷுவா டா சில்ல 37, ரூதர்ஃபோர்டு 25, பிராவோ 8 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.