Advertisement

சிபிஎல் 2021: மார்க் டியல் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த செயிண்ட் லூசியா கிங்ஸ்!

சிபிஎல் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 206 ரன்களை டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
CPL 2021: ST Lucia Kings reach 205/4 from their 20 overs
CPL 2021: ST Lucia Kings reach 205/4 from their 20 overs (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 14, 2021 • 09:32 PM

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சிபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் முதல் அரையிறுதிப் போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 14, 2021 • 09:32 PM

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசிய கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஆண்ட்ரே ஃபிளட்சர் 4 ரன்களிலும், ரகீம் கார்ன்வால் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Trending

பின்னர் ஜோடி சேர்ந்த மார்க் டியால் - ரோஸ்டன் சேஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதில் டியால் அரைசதம் அடித்து அசத்தினார். 

இதையடுத்து 36 ரன்களில் ரோஸ்டன் சேஸ் விக்கெட்டை இழக்க, 78 ரன்களில் மார்க் டியாலும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய டேவிட் வைஸ் - டிம் டேவிட் இணை தங்கள் பங்கிற்கு பவுண்டரிகளைப் பறக்கவிட்டு அசத்தினர். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement