சிபிஎல் தொடரில் புதிய பெயருடன் களமிறங்கும் செயிண்ட் லூசியா!
சிபிஎல் டி20 தொடர் அணிகளில் ஒன்றான செயிண்ட் லூசியா ஸாக்ஸ் அணி, நடப்பு சீசனில் செயிண்ட் லூசியா கிங்ஸ் என்ற பெயருடன் களமிறங்குகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போன்றே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், இத்தொடரின் எட்டாவது சீசன் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 15ஆம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான செயிண்ட் லூசியா ஸாக்ஸ் அணி, இன்று தனது அணியின் பெயரை செயிண்ட் லூசியா கிங்ஸ் என மாற்றம் செய்து, புதிய இலட்சினையையும் வெளியிட்டுள்ளது.
ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் களமிறங்கும் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கடந்தாண்டு சிபிஎல் தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியது. இதனால் நடப்பாண்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் அணியின் பெயரையும், இலட்சினையையும் மாற்றியுள்ளதாக தெரிகிறது.
Win Big, Make Your Cricket Tales Now