
CPL 2021: Trinbago Knight Riders beat Barbodas Royals by 6 Wickets (Image Source: Google)
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணி, பியர், ஹொசைன் ஆகியோரது பந்துவீச்சைத் தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை மட்டுமே சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் காரி பியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி தொடக்க வீரர் லிண்டெல் சிம்மன்ஸ் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வெப்ஸ்டர் 9, பிராவோ 19, செய்ஃபெர்ட் 12 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.