
CPL 2021:Lewis ton seals Patriots' semis berth (Image Source: Google)
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக காலின் முன்ரோ 47 ரன்களையும், சுனில் நரைன் 33 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு கிறிஸ் கெயில் - எவின் லூயீஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் 35 ரன்களில் கெயில் ஆட்டமிழந்து வெளியேறினார்.