சிபிஎல் 2022: குவாலிஃபையருக்கு முன்னேறியது ஜமைக்கா தலாவாஸ்; இறுதிச்சுற்றில் பார்போடாஸ்!
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றிபெற்று இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றுநடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - ஜமைக்கா தலாவஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற லூசியா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜமைக்கா அணியில் தொடக்க வீரர்கள் சொதப்ப, ஷமாரா ப்ரூக்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
Trending
இறுதியில் முகமது நபி 15 பந்துகளில் 4 சிக்சர்களை விளாசி 33 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜமைக்கா தலாவாஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அதிரடியாக விளையாடி தொடக்கம் கொடுக்க, மறுமுனையில் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டூ பிளெசிஸும் 41 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்களும் சொற்ப ரன்களோடு பெவிலியன் திரும்பினர். இதனால் 18 ஓவரிலேயே செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ஜமைக்கா தலாவாஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்திய, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
அதேபோல் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now