
CPL 2022: Shamarh Brooks powers Jamaica Tallawahs to CPL final (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணியில் பிராண்டன் கிங்ஸ், கென்னர் லூயிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷமாரா ப்ரூக்ஸ் - ரோவ்மன் பாவெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய ஷமாரா ப்ரூக்ஸ் சதமடித்ததுடன், 52 பந்துகளில் 8 சிக்சர், 7 பவுண்டரிகள் என 109 ரன்களைச் சேர்த்தார்.